நடுரோட்டில் காரை மறித்த மாணவிகள்; போனில் அதிரடி காட்டிய சபாநாயகர் அப்பாவு: விரைந்து வந்த அரசு பேருந்து

நடுரோட்டில் காரை மறித்த மாணவிகள்; போனில் அதிரடி காட்டிய சபாநாயகர் அப்பாவு: விரைந்து வந்த அரசு பேருந்து

பல ஆண்டு கால பிரச்சினையே ஒரே போன் காலில் தீர்த்து வைத்திருக்கிறார் சபாநாயகர் அப்பாவு. இவரின் இந்த அதிரடி நடவடிக்கையை பார்த்து மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவராக உள்ளார். இந்த நிலையில் நெல்லை மாவட்டம், இடிந்தகரையில் நடைபெறும் விழாவிற்கு சபாநாயகர் அப்பாவு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராதாபுரம் அருகே உள்ள வையகம்பட்டியில் அவரது கார் சென்றுக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் சாலையோரத்தில் பேருந்துக்காக காத்திருந்த 20க்கும் மேற்பட்ட மாணவி, மாணவிகள் அப்பாவு கரை நிறுத்தினர். காரில் இருந்து இறங்கிய சபாநாயகர் அப்பாவு மாணவர்களிடம் விவரத்தை கேட்டுள்ளார். அப்போது, தாங்கள் விளாத்திகுளம் அரசு பள்ளியில் படித்து வருவதாகவும், பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறி இருக்கின்றனர்.

இதையடுத்து, அரசு போக்குவரத்துத்கழக பொதுமேலாளரை தனது செல்போனில் தொடர்ந்து கொண்ட சபாநாயகர் அப்பாவு, பள்ளி மாணவிகளுக்கு தேவையான நேரத்தில் பேருந்துகளை இயக்கவும், பள்ளியின் வாசல் முன்பாக இறக்கிவிட்டு செல்லவும் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, மாணவிகள் இருந்த இடத்திற்கு உடனடியாக அரசு பேருந்து மின்னல் வேகத்தில் வந்தது. பேருந்தில் ஏறி பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்றனர். தங்கள் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த சபாநாயகர் அப்பாவு, மாணவ- மாணவிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். மேலும், அரசு பேருந்து ஓட்டுநரிடம், மாணவிகளை பத்திரமாக பள்ளியில் இறக்கிவிடவும், அதேபோல் மாலையில் பள்ளி விடும் நேரத்தில் வீடுகளில் கொண்டு இறக்கிவிடவும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார். சபாநாயகரின் இந்த அதிரடி நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in