வீட்டுக்கே சென்று வாழ்த்திய சோனியா காந்தி: நெகிழ்ந்துபோன மல்லிகார்ஜுன கார்கே!

வீட்டுக்கே சென்று வாழ்த்திய சோனியா காந்தி: நெகிழ்ந்துபோன மல்லிகார்ஜுன கார்கே!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவை அவரின் வீட்டுக்கே சென்று வாழ்த்தினார் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கே 90 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற அவர், சோனியா காந்தியை அவரது ஜன்பத் இல்லத்திற்குச் சென்று சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கோரினார்.

ஆனால், ஆச்சர்யம் அளிக்கும் விதமாக சோனியா காந்தியே ராஜாஜி மார்க்கில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்துக்குச் சென்றார். பிரியங்கா காந்தியுடன் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்த சோனியா காந்தி, அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டார்.

சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளுக்குச் செல்வது அரிதான நிகழ்வு. 2015 ம் ஆண்டில், நிலக்கரி ஊழல் வழக்கில் இரண்டு முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து மன்மோகன் சிங்கின் வீட்டிற்கு காங்கிரஸ் பேரணி நடந்தது. அப்போது அவர் மன்மோகன் சிங்கின் வீட்டிற்குச் சென்றார். அதன்பின்னர் அவர் செல்லும் இரண்டாவது காங்கிரஸ் தலைவரின் இல்லம் மல்லிகார்ஜுன கார்கேவினுடையதுதான்.

காங்கிரஸைப் பொறுத்தவரை, 21ம் நூற்றாண்டில் காந்தி அல்லாத முதல் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு ராகுல்காந்தி மற்றும் எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in