வெளிநாடு செல்கிறார் சோனியா காந்தி - ராகுல், பிரியங்காவும் பயணம்: என்ன காரணம் தெரியுமா?

இடமிருந்து வலம் - பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்தி
இடமிருந்து வலம் - பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சோனியா காந்திகோப்புப் படம்

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்வார் என்றும், அவருடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேராவும் செல்வார்கள் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஆனாலும் எந்த நாட்டிற்கு செல்கிறார்கள், எந்த தேதியில் செல்கிறார்கள் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவுள்ளார். அவர் டெல்லி திரும்புவதற்கு முன்பு உடல்நிலை சரியில்லாத தனது தாயாரையும் சந்திக்கவுள்ளார்" என்று தெரிவித்துள்ளார். மேலும், வரும் செப்டம்பர் 4 அன்று டெல்லியில் நடைபெறும் காங்கிரஸின் 'மெஹங்காய் பர் ஹல்லா போல்' பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றுவார் என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், சோனியா காந்தி இரண்டாவது முறையாக கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். முதன்முறையாக ஜூன் மாத தொடக்கத்தில் அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்.

ராகுல் காந்தியின் தலைமையில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடங்கும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ’ யாத்திரைக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in