இந்தியாவின் தவப்புதல்வன் கலைஞர்! சோனியா காந்தி புகழாரம்

சோனியா காந்தி
சோனியா காந்தி

"இந்தியாவின் தவப்புதல்வர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதி ஆற்றியப் பணிகள் மகத்தானவை" என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி புகழாரம் சூட்டினார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்பில் நடைபெற்று வரும் மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், "இந்தியாவின் தவப்புதல்வர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதி ஆற்றியப் பணிகள் மகத்தானவை. பாலின சமத்துவத்திற்காக போராடியவர், மொழி, ஜாதி அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் கலைஞர் கருணாநிதி. ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக பாடுபட்டவர் கருணாநிதி. மக்களின் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்ட கலைஞரின் கொள்கையே தற்போது தேசிய அளவில் இயக்கமாக மாறியுள்ளது.

மகளிர் உரிமை மாநாடு
மகளிர் உரிமை மாநாடு

நம்முடைய போராட்டத்தில் இன்னும் நீண்ட நெடிய தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. பொருளாதாரத்திலும் அரசியலிலும் பெண்களுக்கு உரிய பங்கு வழங்க காங்கிரஸ் முன்பே வலியுறுத்தியது. இந்திய பெண்கள் இன்று பல துறைகளில் ஜொலித்து வருகின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்காக சுதந்திர போராட்டத்தின் போது பாடுபட்டது காங்கிரஸ் கட்சி. ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே படித்ததுபோல் ஆகும். பெண்களுக்கு அதிகாரம் தந்தால் நாடே வலிமை பெறும். வறுமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக இந்திரா காந்தி தொடர்ந்து பாடுபட்டார். மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை முதலில் கொண்டு வந்தவர் ராஜீவ் காந்தி. மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்களால் தமிழகத்தை இந்தியாயே இன்று கொண்டாடுகிறது. மகளிர் இட ஒதுக்கீட்டில் தற்போது தெளிவு இல்லாத நிலை உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் அது அமலாகும்.

மகளிர் உரிமை மாநாடு
மகளிர் உரிமை மாநாடு

பெண்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது குடும்பத்திற்கான கல்வி என்று நேரு கூறினார். இந்திரா காந்தி ஆற்றல், வழிகாட்டுதல், தலைமை ஏற்று செயல்படுதல் என்பதற்கு எடுத்துக்காட்டு. ராஜீவ் காந்தி வரலாற்று சிறப்புமிக்க 33 சதவீத இட ஒதுக்கெட்டை உள்ளாட்சி மற்றும் ஆட்சியில் கொண்டு வந்தார். மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு எப்போது அமலுக்கு கொண்டு வரப்போகிறது. உண்மையாக உழைப்போம். வெற்றி நமதே" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in