சோனியா காந்தியின் தாயார் காலமானார்: காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சோனியா காந்தியின் தாயார் காலமானார்: காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
The India Today Group

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, வயது முதிர்வு காரணமாக இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இத்தகவலைக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில், சனிக்கிழமை சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ காலமானதாகவும், நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் பதிவு செய்துள்ளார்.

பாவ்லா மைனோ 90 வயதை அடைந்த நிலையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தாயாரைப் பார்ப்பதற்காகச் சோனியா காந்தி கடந்த 23-ம் தேதி டெல்லியில் இருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் சென்றனர். இந்நிலையில் பாவ்லா மைனோ இறந்துவிட்டதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து காங்கிரஸ் பிரமுகர்கள் தங்களது இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in