அமலாக்கத்துறை விசாரணைக்கு மீண்டும் ஆஜரானார் சோனியா காந்தி: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

சோனியா காந்தி
சோனியா காந்தி

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டதையடுத்து இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். விசாரணைக்கு ஆஜராகியுள்ள சோனியா காந்தியுடன் அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் சென்றுள்ளனர். ஏற்கெனவே ஒரு முறை சோனியா காந்தி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜாரான நிலையில் இரண்டாவது முறையாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்களும் போராட்டம் நடத்துகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு திரண்ட மகிளா காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கும் சம்மன் அனுப்பபட்டு, அவரிடம் அமலாக்கத்துறை பல நாட்கள் விசாரணை நடத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in