காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வீட்டுத்தனிமையில் இருந்த சோனியா காந்தி இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சைக்காகத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டி இருப்பதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

இதனிடையில் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி நாளை ஆஜர் ஆகிறார். இதற்குக் கண்டனம் தெரிவித்து இந்தியா முழுவதிலும் உள்ள அமலாக்கத் துறை அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அமலாக்கத் துறையில் ஆஜர் ஆகுமாறு சோனியா காந்திக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. கரோனா தொற்றினால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதால் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தார். அதன்படி வரும் 23-ம் தேதி ஆஜர் ஆக அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in