பாஜகவில் மகன் ஐக்கியம்: திருச்சி சிவா பதில் கூற மறுப்பு

பாஜகவில் மகன் ஐக்கியம்: திருச்சி சிவா பதில் கூற மறுப்பு

தனது மகன் பாஜகவில் இணைந்துள்ளது குறித்த செய்தியாளர்கள் கேட்டதற்கு, திருச்சி சிவா எம்.பி பதில் கூற மறுத்துவிட்டார்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் முத்தமிழ் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலங்களை உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக இந்தி பயன்படுத்தப்படும் என்ற அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், இந்தி மொழி மட்டுமே ஆட்சி என்று சொல்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய நாட்டை பொறுத்தவரை அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இந்தி ஆட்சி மொழி என்பதை போல் ஆங்கிலமும் ஆட்சி மொழி என்பதை தொடர்ந்து பின்பற வேண்டும்.

இந்தி என்பது இந்த நாட்டில் இருக்கின்ற பல்வேறு மொழிகளில் ஒன்று. அந்த மொழி ஒன்றினை மட்டுமே மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. பல மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் உள்ளடங்கிய இந்திய நாட்டில் அந்தந்த மொழிக்கு ஓர் முக்கியத்துவம் கிடைக்கும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருந்திட வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சி மொழி சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆங்கிலத்தை அகற்றி விட்டு இந்தி மட்டுமே என்ற நிலையை மத்திய அரசோ, வேறு அமைப்போ மேற்கொள்ளுமானால் அதனை எல்லா வகையிலும் போராடி தடுத்து நிறுத்தி ஆங்கிலம் தொடர்ந்திடுவதற்காக எல்லா முயற்சிகளையும் திமுக எடுக்கும்" என்றார்.

உங்கள் மகன் சூர்யா, பாஜகவில் இணைந்துள்ளாரே என்ற கேள்விக்கு அவர் பதில் எதுவும் கூறாமல் நழுவிச் சென்றுவிட்டார்.

Related Stories

No stories found.