நம்மை மறுபடியும் சில பேர் கூர் தீட்டி விட்டு இருக்கிறார்கள்: கனிமொழி சீற்றம்

கனிமொழி
கனிமொழி

கல்வி, மருத்துவம் என பல்வேறு சாதனைகளை செய்து விட்டோம் என்று நாம் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் நம்மை மறுபடியும் சில பேர் கூர் தீட்டி விட்டு இருக்கிறார்கள் என திமுகவின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடபழனி பஜனை கோயில் தெருவில் திமுக 131-ம் வட்ட கழக செயளாலர் தட்சன் ஹரிஹரன் தலைமையில் 'சென்னையில் ஒரு கிராமத்து பொங்கல்' என்ற அமைப்பில் பாரம்பரிய கலைகளுடன் கூடிய பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி ,சென்னை தென்மேற்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த.வேலு, தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக துணைப்பொதுச்செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, " உழவு திருநாளை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கக் கூடிய இந்த வேளையிலே நாம் சில பேருக்கு நன்றியையும் சொல்ல வேண்டும். இந்த பொங்கலில் தமிழர்களின் சுயமரியாதை உணர்வுகளை முன்னுக்கு கொண்டு வந்து நிறுத்தி தமிழ்நாடு என்று பெருமையோடு சொல்லக்கூடிய திராவிட மாடல் அரசு என்பதை சொல்வதற்கு சில பேருக்கு பயமாக இருக்கலாம். நம் நன்மைக்கு எதிராய் நிற்ப்பவர்கள் எதிர்கட்சி என்று ஆகிட முடியாது.

இந்தியாவைத் தாண்டி வளர்ந்து இருக்கக்கூடிய நாடுகளில், அந்தந்த ஊர்களில் இருக்கக்கூடிய வாழ்க்கை தரத்தை எட்டி தொட்டுக் கொண்டு நிற்கக்கூடிய ஒன்றுதான் திராவிட மாடல் ஆட்சி. கல்வியாக இருக்கட்டும், பாஜக ஒன்றிய அரசு 30 வருடம் பொறுத்து சாதிப்போம் என கூறியதை, தற்போதே தமிழ்நாடு இப்பொழுதே சாதித்து கடந்து விட்டது. வளர்ந்த நாடுகளில் கூட டாக்டர்கள் சந்தித்து வைத்தியம் பார்த்துக்கொண்டு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும் ஆனால் வீடு தேடி வந்து கதவை தட்டி மருத்துவ வசதிகளை செய்யக்கூடிய ஆட்சி திராவிட மாடல் அரசு. இந்த சாதனைகளை எல்லாம் செய்து விட்டோம் என்று நாம் மகிழ்ச்சியாக இருந்த அந்த நேரத்திலே நம்மை மறுபடியும் கூர் தீட்டி விட்டு இருக்கிறார்கள் சில பேர். அவர்களுக்கு இந்த பொங்கலிலே தமிழ்நாட்டு மக்களின் பொங்கல் வாழ்த்துக்களை உங்கள் சார்பிலே தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in