ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்: பரபரப்பை கிளப்பிய சஞ்சய் ராவத்

சஞ்சய் ராவத்  எம்பி
சஞ்சய் ராவத் எம்பி

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சியுடன் தொடர்பில் இருப்பதாக அப்பிரிவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா முகாமைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உத்தவ் தாக்கரே அணியுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் ராவத், "எங்களுடன் தொடர்பு எப்போதும் இருக்கும். ஷிண்டே முகாமைச் சேர்ந்தவர்கள் தங்கள் குறைகளை இப்போது வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இதைப் பகிரங்கமாகச் சொல்வது சரியல்ல. அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். எனவே அவர்கள்தான் அதைக் கையாள வேண்டும்.

ஷிண்டே குழுவில் உள்ளவர்கள் பாஜக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு. இந்த தகவல் எங்களிடம் உள்ளது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in