'சமூக நல்லிணக்க பெரியாரே': மோடி பிறந்த நாளில் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்

'சமூக நல்லிணக்க பெரியாரே':  மோடி பிறந்த நாளில் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி பாஜகவினர் வெளியிட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இரண்டாவது முறையாக பிரதமர் பதவியில் உள்ள மோடியின் பிறந்த நாளை நாடு முழுவதும் பாஜகவினர் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழக பாஜக சார்பில் மோடி பிறந்த நாளையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மோடியின் பிறந்த நாளையொட்டி வித விதமான போஸ்டர்களும் பாஜகவினரால் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

அப்படி ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், 'சமூக நல்லிணக்க பெரியாரே' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமத்துவம், பெண் விடுதலை, சமூக ஒற்றுமையை வலியுறுத்திய தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள் இன்று கொண்டாடும் நிலையில், ஒற்றைக் கலாச்சாரத்தை வலியுறுத்தும் மோடியை பெரியாருடன் ஒப்பிட்டு போஸ்டர் அடித்துள்ளது தவறு என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த போஸ்டர் செங்கல்பட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in