டெல்லியில் செப்.19ல் திமுகவின் சமூக நீதி மாநாடு!

சமூக நீதி மாநாடு
சமூக நீதி மாநாடு
Updated on
1 min read

திமுக தலைமையிலான சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் 2வது தேசிய மாநாடு செப்டம்பர் 19ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தேசிய மாநாடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, உத்தரபிரதேச எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு - காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிக் ஓ பிரையன், திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஏப்ரல் மாதம் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில், இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் போது சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டுமென்றும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்றும் அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் , திமுக தலைமையிலான சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் 2வது தேசிய மாநாடு செப்டம்பர் 19ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in