வேட்புமனு தாக்கல் செய்யும் துரை வைகோ
வேட்புமனு தாக்கல் செய்யும் துரை வைகோ

தமிழகத்தில் ஒரே நாளில் இத்தனை பேர் வேட்புமனு தாக்கலா?

தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் இதுவரை 405 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளனர்.

எல்.எல்.ஏக்கள் புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன்
எல்.எல்.ஏக்கள் புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல், தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. அதன்படி வேட்புமனுக்கள் 20-ம் தேதி தொடங்கி நாளை அதாவது 27-ம் தேதி வரை வேலை நாட்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 03 மணி வரை மட்டும் பெறப்பட்டு வருகிறது.

வேட்பாளர்கள் ராதிகா சரத்குமாரும், விஜயபிரபாகரனும்
வேட்பாளர்கள் ராதிகா சரத்குமாரும், விஜயபிரபாகரனும்

வேட்புமனு தாக்கலின்போது அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பு போன்றவற்றில் மும்முரமாக இருந்ததால், ஒரு சில சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் நேற்று பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுக, பாஜக என பிரதான கட்சியின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி நேற்று இரவு வெளியான தேர்தல் ஆணைய தகவலின்படி, தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் இதுவரை 405 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில், அதிகபட்சமாக தென்சென்னை, நாமக்கல்லில் 17 பேரும், கிருஷ்ணகிரியில் 16 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்த அளவாக தென்காசி தொகுதியில் 4 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வடசென்னை உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மாற்றுக்கட்சியினர் வாக்குவாதம் போன்ற நிகழ்வுகளும், எதிர்கட்சியினர் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்த நிகழ்வுகளும் அரங்கேறின.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in