விமானத்தில் ஸ்மிருதிராணியை தெறிக்கவிட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி

விமானத்தில் ஸ்மிருதிராணியை தெறிக்கவிட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி

எரிவாயு விலை குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகளிர் அணித் தலைவி கேள்வி எழுப்பிய வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து கவுகாத்திக்கு செல்லும் விமானத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியும், மகளிர் காங்கிரஸ் தலைவர் டெட்டா டிசோசாயும் ஒன்றாக பயணம் செய்துள்ளனர். விமானம் தரையிறங்கியபோது அனைவரும் கீழே இறங்கியுள்ளனர். அப்போது, மகளிர் காங்கிரஸ் தலைவி டெட்டா டிசோசா, மத்திய அமைச்சர் ஸ்மிருராணியை இடைமறித்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறித்து கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, இரண்டு பேரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிசோசா, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறித்து கேள்வி எழுப்பியதற்கு, தடுப்பூசிகள், ரேஷன் பொருட்கள் மற்றும் ஏழைகள் மீது அவர் குற்றம்சாட்டியாக தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொந்தளித்துள்ளார். அவர் அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில டேக் செய்து, "காங்கிரஸ் கட்சி ஆபத்தான எல்லைக்குள் நுழைகிறது. அமைச்சரிடம் மகளிர் காங்கிரஸ் தலைவி மரியாதையின்றி நடந்துள்ளார்" என்று விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in