பெண்களுக்கு 7.5% வட்டியில் சிறுசேமிப்பு திட்டம்: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பு!

மத்திய பட்ஜெட் 2023
மத்திய பட்ஜெட் 2023பெண்களுக்கு 7.5% வட்டியில் சிறுசேமிப்பு திட்டம்: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பு!

7.5% வட்டியில் பெண்களுக்கான புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 2 ஆண்டுகளில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார்.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக 2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: செல்போன் உற்பத்தியை அதிகரிக்க அதன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரிவிலக்கு அளிக்கப்படும். வரும் நிதியாண்டில் ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம். 7.5% வட்டியில் பெண்களுக்கான சிறுசேமிப்பு திட்டம் நடைமுறைக்கு வரும், இதில் 2 ஆண்டுகளில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம் சமையலறை சிம்னிக்கான இறக்குமதி உரி உயர்த்தப்படும். சிகரெட்டுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.9 லட்சமாக உயர்த்தப்படும். இளைஞர்கள் உலகளாவிய வேலைவாய்ப்பினை பெற உதவும் வகையில் 30 மையங்கள் அமைக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயம் மேற்கொள்ள அரசு உதவி செய்யும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக இன்று காலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட்டாக இது அமைகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்களைக் கவரும் வகையில் இந்த பட்ஜெட் கவர்ச்சி பட்ஜெட்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in