சிறிய கட்சிகளுக்கெல்லாம் சின்னம் ஒதுக்குவது எப்போது? - சத்யபிரதா சாகு தகவல்!

மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு
மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு

விசிக, மதிமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிகாரபூர்வ சின்னத்தை தற்போதுவரை இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கபடவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல்

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, புதிய வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டுமென்ற விளக்க விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு, "பிரதமர் மோடி தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். 2 கோடி வீடுகளுக்கு இந்த மாத இறுதியில் வாக்களிப்பது எப்படி என்ற விளக்க கையேடு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வீடுகளுக்கே சென்று அளிக்கப்பட உள்ளது.

வைகோ, திருமா, துரைவைகோ
வைகோ, திருமா, துரைவைகோ

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுகாக 25 கம்பெனி துணை ராணுவம் வந்துள்ள நிலையில், கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவம் விரைவில் வர உள்ளது. மொத்தமாக 190 கம்பெனி துணை ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.தமிழ்நாட்டில் 453 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரச்சார அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள், மதிமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு தொடர்பான உத்தரவு இதுவரை இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து வரவில்லை. சிவிஜில் செயலி மூலம் இதுவரை 11,305 புகார்கள் பெறப்பட்டுள்ளது. வாக்காளர்களிடம் இருந்து 17,800 புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது. 85 வயதுடையோருக்கு வீடு வீடாக சென்று வாக்களிக்கும் படிவம் வழங்குதல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது", என தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in