பிளாஸ்டிக் டப்பாக்களால் ஜமாப் இசை நிகழ்ச்சி நடத்திய சிறுவர்கள்... வியந்து பார்த்த அமைச்சர் டிஆர்பி.ராஜா!

பிளாஸ்டிக் டப்பாக்கள், தட்டுக்கள் கொண்டு ஜமாப் இசைத்த சிறுவர்கள்
பிளாஸ்டிக் டப்பாக்கள், தட்டுக்கள் கொண்டு ஜமாப் இசைத்த சிறுவர்கள்

தட்டு, பிளாஸ்டிக் டப்பாக்களை இசை கருவிகளாக்கி வரவேற்பு அளித்த பழங்குடியின சிறுவர்களின் திறமையை வியந்து ரசித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அவர்களை நன்றாக கல்வி பயில வேண்டும் என அறிவுறுத்தினார்.

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சூலூர் தாலுகா, பதுவம்பள்ளி ஊராட்சி பகுதியில் தேர்தல் பணிமனைக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று காலை சென்றிருந்தார். அப்போது அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார். ஆரம்ப பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால், மாணவர்கள் பசியின்றி இருப்பதாக தெரிவித்தனர்.

சிறுவர்களின் திறமைக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
சிறுவர்களின் திறமைக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

மேலும் வீட்டில்கூட சாப்பிடாதவர்கள் பள்ளியில் சாப்பிடுவதாகவும், அந்த அளவிற்கு நன்றாகவும் சிறப்பாகவும் இருப்பதாகவும் தெரிவித்தனர். அப்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அந்த மாணவர்களை மகிழ்ச்சியுடன் பாராட்டியதுடன், ”உங்களுக்கு உணவு வழங்கியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் இங்கு வர உள்ளார். அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். உணவு சரியில்லை என்றால் உடனே கூறுங்கள். அதிகாரிகளிடம் கூறி உடனே சரிசெய்ய உத்தரவிடுகிறோம்” என கூறினார்.

காலை உணவு திட்டம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
காலை உணவு திட்டம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

இதைத்தொடர்ந்து இன்று மதியம், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள், ஆனைகட்டி மலை கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றனர். அப்போது அங்குள்ள சிறுவர்கள் ஒன்றினைந்து பிளாஸ்டிக் கேன்கள், தட்டுகளை கொண்டு ஜமாப் வாசித்தனர். இதனை ரசித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் நிர்வாகிகள் பின்னர் அந்த சிறுவர்களை அழைத்து பாராட்டினர். மேலும் கலையில் உள்ள ஆர்வத்தை படிப்பிலும் காட்ட வேண்டும் என அமைச்சர் அப்போது அறிவுரை வழங்கினார்.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in