வெளியே போங்க ஓபிஎஸ்... பொதுக்குழு கூட்டத்தில் முழக்கம்: அமைதிப்படுத்திய வளர்மதி

வெளியே போங்க ஓபிஎஸ்... பொதுக்குழு கூட்டத்தில் முழக்கம்: அமைதிப்படுத்திய வளர்மதி

பொதுக்குழு கூட்ட மேடைக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சுக்கு எதிராக அங்கிருந்த உறுப்பினர்கள், வெளியே போங்கள் என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். இதையடுத்து, மாற்றுப் பாதையில் ஓபிஎஸ் வாகனம் சென்றது. முதலில் ஓபிஎஸ் பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு வந்தடைந்தார். அப்போது, ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர். ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்ஸை கண்டுகொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து, மண்டபத்துக்கு ஓபிஎஸ் வருகை தந்தார். அப்போது, அங்கிருந்த ஈபிஎஸ் ஆதரவாளர்கள், வெளியே போங்கள் என்று முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து, வளர்மதி எழுந்து, ``அனைவரும் அமைதி காக்க வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கூட்டத்தை நடத்த வேண்டும். ஆயிரம் கைகள் மறைந்தாலும் ஆதவன் மறைவதில்லை" என பேசினார். இதனிடையே, ஓபிஎஸ் நோக்கி துரோகி என முழக்கமிட்டதால் அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தார். இதனிடையே, ராணுவ கட்டுப்பாட்டுன் உள்ள கட்சி என்பதால் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் கேட்டுக் கொண்டார். ஆனாலும் உறுப்பினர்கள் தொடர்ந்து ஓபிஎஸ்சுக்கு எதிராக முழக்கமிட்டப்படி இருந்தனர். திடீரென மேடையில் இருந்த வைகை செல்வன் எழுந்து, அனைவரையும் உட்காரும்படி கேட்டுக் கொண்டார். தொடர்ந்து மேடையில் கூச்சல், குழப்பம் நிலவி வருகிறது.

முன்னதாக ஓபிஎஸ் மேடை ஏறியபோது அருகில் இருந்த வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் வரவேற்காமல் இருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in