'சார் நீங்க எளிமையாக, ஸ்மார்ட்டா, இளமையாக இருக்கிறீர்கள்': கார்ப்பரேஷன் கமிஷனருக்கு ஐஸ் வைத்த செல்லூர் ராஜூ

'சார் நீங்க எளிமையாக, ஸ்மார்ட்டா, இளமையாக இருக்கிறீர்கள்': கார்ப்பரேஷன் கமிஷனருக்கு ஐஸ் வைத்த செல்லூர் ராஜூ

" சார் நீங்க இளமையாக ஸ்மார்ட்டா, எளிமையாக இருக்கிறீர்கள், உங்களைப்போல் மதுரை மாநகராட்சியை மாற்றுங்கள்" என்று மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங்கை சந்தித்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேருடன் மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்கு இன்று வந்தார். அங்கு அவர் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங்கை சந்தித்து மனு வழங்கினார்.
அப்போது அவர், மாநகராட்சி ஆணையாளரைப் பார்த்து, ‘‘சார் நீங்க எளிமையாக, ஸ்மார்ட்டா , இளமையாக இருக்கிறீர்கள். உங்கள் அலுவலகமும் ஸ்மார்ட் ஆக உள்ளது. அதுபோல மதுரை மாநகராட்சியும் ஆக வேண்டும் என்று விரும்புகிறோம் ’’ என்றார்.

இதன் பின் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொய்வாக நடக்கிறது. மீனாட்சியம்மன் கோயில் பல்லடுக்கு வாகன நிறுத்தமும் கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ளது. மக்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய வரி வருவாயைக் காட்டிலும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கிடைக்க வேண்டிய வருவாய் இனங்களை கண்டறிந்து மாநகராட்சி வருவாயைப் பெருக்க வேண்டும் என்றார்.

மேலும், கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீர் குடிநீருடன் கலந்து வீடுகளுக்கு வருகிறது. இந்த பிரச்சினை 100 வார்டுகளிலுமே உள்ளது. மதுரை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கக்கூடிய பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். தற்போது வைகை ஆறு பிரமாதமாக உள்ளது. என்னைக் கூட நான் மதுரையை சிட்டினியாக்குவேன் என்ற போது கேலி, கிண்டல் செய்தனர். தற்போது மதுரை வைகை ஆற்றை வந்து பாருங்கள். எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள். ஆனால், இந்த வைகை ஆறு சாலை தொடர்ச்சியாக இல்லாமல் உள்ளது. அதனையும் விரைவாக அமைக்க வேண்டும் ’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in