பளபளக்கும் பட்டு வேட்டி, சட்டையில் மு.க.ஸ்டாலின்: கோலாகலமாகத் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்!

பளபளக்கும் பட்டு வேட்டி, சட்டையில் மு.க.ஸ்டாலின்: கோலாகலமாகத் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட்!

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்குப் பட்டு வேட்டி. பட்டு சட்டையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு வந்துள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கிறார்கள். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 187 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் மாமல்லபுரத்திலிருந்து பேருந்துகளில் நேரு உள்விளையாட்டரங்கத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளனர்.

நேரு விளையாட்டு அரங்கில் தொடக்க விழா மேடை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. இந்த விழாவில் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்டு வேட்டி மற்றும் பட்டுச் சட்டை அணிந்து மேடைக்கு வந்துள்ளார். பட்டு வேட்டி பட்டுச் சட்டையில் கலந்து கொள்ளும் ஸ்டாலினின் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in