‘வறட்சியில் தவிக்கும் கர்நாடகாவுக்கு தண்ணீர் திறந்துவிடுங்கள்’ - மகாராஷ்டிர முதல்வருக்கு சித்தராமையா கோரிக்கை!

சித்தராமையா
சித்தராமையா ‘வறட்சியில் தவிக்கும் கர்நாடகாவுக்கு தண்ணீர் திறந்துவிடுங்கள்’ - மகாராஷ்டிர முதல்வருக்கு சித்தராமையா கோரிக்கை!

கர்நாடகாவின் குடிநீர் தேவைக்காக வர்ணா/கொய்னா நீர்த்தேக்கத்தில் இருந்து கிருஷ்ணா நதிக்கும், உஜ்ஜனி நீர்த்தேக்கத்தில் இருந்து பீமா நதிக்கும் தண்ணீர் திறக்குமாறு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் கர்நாடக முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கும் சித்தராமையா எழுதிய கடிதத்தில், “வட கர்நாடகா மாவட்டங்களான பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், கலபுர்கி, யாதகிரி மற்றும் ராய்ச்சூர் ஆகிய மாவட்டங்கள் மார்ச் 2023 முதல் கடுமையான கோடைகாலத்தின் காரணமாக கடும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. எனவே மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வர்ணா/கொய்னா நீர்த்தேக்கத்தில் இருந்து கிருஷ்ணா நதிக்கு மூன்று டிஎம்சி தண்ணீரையும், உஜ்ஜனி நீர்த்தேக்கத்தில் இருந்து பீமா நதிக்கு மூன்று டிஎம்சி தண்ணீரையும் கர்நாடக அரசு முன்பு கேட்டிருந்தது.

அதன்படி, மே மாதம் முதல் பதினைந்து நாட்களில் மகாராஷ்டிரா அரசு கிருஷ்ணா நதிக்கு ஒரு டிஎம்சி தண்ணீரை திறந்து விட்டதற்கு நன்றி. ஆனால், வடமாவட்டங்களில் கடுமையான கோடை சூழல் நிலவுவதால், மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு, வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் தேவைப்படும் நிலையில் பருவமழை இன்னும் தொடங்கவில்லை

இதனால் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வர்ணா/கொய்னா நீர்த்தேக்கத்தில் இருந்து கிருஷ்ணா நதிக்கு இரண்டு டிஎம்சி தண்ணீரையும், உஜ்ஜனி நீர்த்தேக்கத்தில் இருந்து பீமா நீர்த்தேக்கத்திற்கு மூன்று டிஎம்சி தண்ணீரையும் உடனடியாக திறந்துவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த கடிதத்தில் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in