‘எங்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது’ எம்எல்ஏக்கள் உடன் டெல்லி போராட்டத்துக்கு தயாராகும் முதல்வர்

கர்நாடக முதல்வர் சித்தராமையா  மற்றும் துணை முதல்வர்டி.கே.சிவகுமார்
கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர்டி.கே.சிவகுமார்

மானியப் பங்கினை விடுவிப்பது உட்பட பல்வேறு வகைகளில் கர்நாடக மாநிலத்தையும் அதன் மக்களையும் பாஜக தலைமையிலான மத்திய அரசு வஞ்சிப்பதாக குற்றம்சாட்டி, மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி, முதல்வர் சித்தராமையா தலைமையில் டெல்லி கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நாள் குறித்துள்ளது.

’மத்திய அரசின் மானியப் பங்கை விடுவிப்பதில் கர்நாடக மாநிலத்துக்கு அநீதி இழைத்துள்ளதால், அதற்கு எதிராக பிப்ரவரி 7 அன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று தெரிவித்தார். இந்தப் போராட்டத்திற்கு முதல்வர் சித்தராமையா தலைமை தாங்க இருக்கிறார். உடன் மாநிலத்தின் 138 எம்எல்ஏக்கள், எம்எல்சிகள் மற்றும் எம்பிக்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

இது தொடர்பாக மேலும் பேசிய டி.கே.சிவகுமார், “கடந்த 5 ஆண்டுகளில், மாநிலத்துக்கான பங்குத்தொகை 62 ஆயிரம் கோடி ரூபாய் வரவில்லை. 'டபுள் எஞ்சின்' அரசாங்கம் என்ற பெயரில் மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசு ஆட்சியில் இருந்தபோதும், கர்நாடகாவை மத்திய அரசு வஞ்சித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள 236 தாலுகாக்களில் 200க்கும் மேற்பட்டவை கடும் வறட்சியில் தத்தளித்து வருகின்றன, ஆனால் இன்னும் மாநிலத்திற்கு எந்த நிவாரண உதவியையும் மத்திய அரசு விடுவிக்கவில்லை. எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் மாநில உரிமைகளுக்காகப் போராடுவது தவிர்க்க முடியாததாகி விட்டது” என்றும் டி.கே.சிவகுமார் விவரித்தார்.

முதல்வர் சித்தராமையா
முதல்வர் சித்தராமையா

நிதர்சனத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு பெரும் நிதி நெருக்கடியில் தள்ளாடி வருகிறது. நிதியமைச்சக பொறுப்பில் நீண்ட அனுபவம் கொண்ட முதல்வர் சித்தராமையாவும் நடப்பு நெருக்கடிகளை சமாளிக்க முடியாது திணறி வருகிறார். மதுபானங்களுக்கான கலால் மற்றும் இதர வரிகளை கணிசமாக உயர்த்தியும், தேர்தல் வாக்குறுதிகளான முக்கிய நலத்திட்டங்களை செயபடுத்துவதில் காங்கிரஸ் அரசு கர்நாடகத்தில் தத்தளித்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அதிரடி... தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அறிவித்தார் நடிகர் விஜய்!

பேடிஎம் கணக்கில் உள்ள வாடிக்கையாளர் பணம் என்னாகும்? ரிசர்வ் வங்கி தடையை தொடர்ந்து பேடிஎம் விளக்கம்!

பிரதமரின் வருகையால் ராமேஸ்வரம் கோயிலில் எகிறிய உண்டியல் காணிக்கை - 16 நாளில் இவ்வளவா?

சோகம்... புற்றுநோயால் காலமான நடிகை பூனம் பாண்டே!

வீட்டிற்குள் விழுந்து நொறுங்கிய விமானம்... அதிர வைக்கும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in