2019ல் காங்கிரஸ் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய சித்தராமையா கட்டாயப்படுத்தினார்: முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

கே.சுதாகர்
கே.சுதாகர்2019ல் காங்கிரஸ் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய சித்தராமையா கட்டாயப்படுத்தினார்: முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

2019ம் ஆண்டில் கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசாங்கம் கவிழ்வதற்கு காரணமான சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் பாஜக அமைச்சர் சுதாகர், முன்னாள் முதல்வர் சித்தராமையா தங்களை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

2019ம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பிற்கு 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய தூண்டியதில் தனக்கு மறைமுகமான அல்லது வெளிப்படையான பங்கு இல்லை என்பதை சித்தராமையா மறுக்க முடியுமா என்று கே.சுதாகர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ராஜினாமாக்கள் மூலமாக கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, கர்நாடகாவின் முதல்வர் பதவிக்கான போட்டியில் சித்தராமையா, டிகே சிவகுமாரை விட முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸிலிருந்து 2019ல் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு முந்தைய பாஜக அரசில் அமைச்சராக பதவியேற்ற சுதாகர் சித்தராமையா குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர், “மதசார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் ஆட்சி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், எம்எல்ஏக்கள் தன்னிடம் செல்லும் போதெல்லாம் தனது தொகுதி மற்றும் மாவட்டத்திலேயே பணிகள் முடங்கிக் கிடப்பதாகவும் கூட்டணியின் ஒருங்கிணைப்புத் தலைவராக இருந்த சித்தராமையா தனது ஆதரவற்ற நிலையை அவர்களிடம் வெளிப்படுத்துவார்.

2019 லோக்சபா தேர்தல் வரை காத்திருக்குமாறு சட்டமன்ற உறுப்பினர்களை சித்தராமையா கேட்டுக் கொள்வார் என்றும், அதற்குப் பிறகு ஒரு நாள் கூட குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை தொடர அனுமதிக்க மாட்டோம் என்றும் சித்தராமையா கூறுவார்” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் காரணமாகவே இறுதியில் எங்களில் சிலர் தவிர்க்க முடியாமல் காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவில் சேர வேண்டியிருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். சுதாகரின் இந்த கருத்து தற்போது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in