தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவிக்கும் சித்தராமையா: கர்நாடக காங்கிரஸில் பரபரப்பு!

தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவிக்கும் சித்தராமையா: கர்நாடக காங்கிரஸில் பரபரப்பு!

கர்நாடகாவில் 2023 ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை, கட்சி தலைமையின் ஒப்புதலின்றி தன்னிச்சையாக முன்னாள் முதல்வர் சித்தராமையா அறிவித்து பரபரப்பு கிளப்பி வருகிறார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரின் பெயரை சித்தராமையா நேற்று அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மற்றொரு வேட்பாளரின் பெயரை சித்தராமையா நேற்று அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

பாகல்கோட்டில் உள்ள ஹங்குன்ட் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ விஜயானந்த் காஷபனவரை கட்சியின் ஒப்புதலுக்குக் கூட காத்திருக்காமல் முன்னாள் முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, "விஜயானந்த் காஷாபனவருக்கு சீட்டு வழங்க வேண்டும், அவர் 100 சதவீதம் வெற்றி பெறுவார். உங்கள் அனைவரின் ஆசியுடன் அவர் சட்டசபைக்கு வருவார்" என்றார்.

2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் மேலிடத்தின் ஆலோசனையின்றி சித்தராமையா வேட்பாளரை அறிவிப்பது இது முதல் முறையல்ல. நவம்பரில் கூட, மாநிலத்தின் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் அறிவித்தார். இதனால் கட்சியும், மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாரும் சங்கடத்துக்குள்ளாகினர்.

நவம்பர் மாதம் கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள வானம்பரி கிராமத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சித்தராமையா ஐந்து வேட்பாளர்களையும் அறிவித்தார். "கனககிரியில் சிவராஜ் தங்கடி, குஷ்டகியில் அமரேகவுடா பையாபுரி, யெல்பர்காவில் பசவராஜ் ராயரெட்டி, கொப்பலில் ராகவேந்திரா ஹிட்னல், கங்காவதியில் இக்பால் அன்சாரி ஆகியோருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என சித்தராமையா அந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் பேசினார்.

மேலும், தான் அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து, மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற உதவுமாறும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in