எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

திருச்சியில் பெண் ஒருவரை சாலையில் ஆண் ஒருவர் தரதரவென இழுத்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "திருச்சியில் நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்று, பட்டப்பகலில் வழிப்பறி செய்திருப்பது நெஞ்சை பதற வைக்கிறது. யார்க்கும்-எதற்கும் அஞ்சோம் எனும் மனநிலையில் தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.

ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தது போல் தமிழ்நாட்டில் எது நடந்தாலும், சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்து போனாலும், விளம்பர அரசியல் செய்யும் விடியா அரசின் முதல்வரின் காதுகளுக்கு மட்டும் அது எட்டுவதே இல்லை என்பது வேதனைக்குரியது" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in