`தீ குளித்தால் தான் நீதி கிடைக்குமா?'- அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

`தீ குளித்தால் தான் நீதி கிடைக்குமா?'- அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

தனது 16 வயது மகளைக் கடந்த ஒரு வருட காலமாகத் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய திமுக ஊராட்சி தலைவரின் மகன், தங்களை தாக்கிய அவரது உறவினர்களை கைது செய்யக் கோரி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார். இந்த வீடியோவை பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதன் விவரங்களையும் பதிவு செய்துள்ளார். அதில், "விருதுநகர் மாவட்டம், இருக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த தனது 16 வயது மகளைக் கடந்த ஒரு வருட காலமாகத் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய திமுக ஊராட்சி தலைவரின் மகன் மற்றும் நீதி கேட்டுச் சென்ற பொழுது தங்களைத் தாக்கிய திமுக தலைவரின் உறவினர்களையும் உடனடியாக கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீ குளிக்க முயன்றுள்ளார் தாய்.

தமிழகத்தில் தினந்தோறும் திமுகவினரின் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தீ குளித்தால் தான் நீதி கிடைக்குமா? கட்சியில் உள்ளவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல், சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று முதல்வர் முழங்குவதால் எந்தவித பயனும் இல்லை. பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க இந்த அரசு உடனடியாக வழிவகை செய்யவேண்டும். கயவர்களைக் கைது செய்யாவிட்டால் விருதுநகரில் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க பாஜக தயங்காது" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.