’ஆயுசுக்கும் கோர்ட் வாசல்ல அலைய வெச்சுடுவேன்...’ பறக்கும் படை அதிகாரியை மிரட்டிய பாஜக வேட்பாளர்!

தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவினரிடம் வாக்குவாதம் செய்த திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்
தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவினரிடம் வாக்குவாதம் செய்த திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்

வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற பறக்கும் படை அதிகாரியை திருப்பூர் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், ‘ஆயுசுக்கும் கோர்ட் வாசல்ல அலைய வெச்சுடுவேன்’ என்று மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம் வேட்பாளராக போட்டியிடுகிறார். திருப்பூர் மக்களவைத் தொகுதியில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய இரு தொகுதிகளும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட 4 தொகுதிகளும் இடம் பெற்றுள்ளது.

இன்று காலை பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் பிரச்சாரத்திற்காக தனது காரில் கோபிசெட்டிபாளையம் சென்று விட்டு, திரும்ப வரும் வழியில் பறக்கும் படை அதிகாரிகள் அவரது காரை நிறுத்தி சோதனை இட முயன்றுள்ளனர். அப்போது அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஏ.பி.முருகானந்தம், கண்காணிப்பு நிலை குழுவினரிடம், ”நீங்கள் யார்? எதற்காக பேசுகிறீர்கள்? சவுண்டெல்லாம் விடாதீங்க. வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன்” என்று விரல்களை நீட்டி மிரட்டும் தொனியில் குறிப்பிட்டார்.

தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவினரிடம் வாக்குவாதம் செய்த திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்
தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவினரிடம் வாக்குவாதம் செய்த திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்

பல இடங்களில் தனது வாகனத்தை நிறுத்தி சோதனையிடுவதாக அவர் கூறிய போது, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்து, முருகானந்தம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதனிடையே இந்த வீடியோ குறித்து கருத்து பதிவிட்டுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர், ”எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சோதிக்கப்படுகிறது. அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகளை மட்டுமல்ல பொதுவாக மக்களையே மதிப்பதில்லை. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும்? அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்? சிந்தியுங்கள்!” என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...   

இன்று மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை... சிக்காத சிறுத்தையால் தவிக்கும் வனத்துறை!

இன்று முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்க சதி... பாகிஸ்தானியர் உள்பட மூவர் கைது!

பாஜக ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை... அதிர விட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்!

அரசு மருத்துவமனை வாசலில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்... விரட்டியடித்த 3 டாக்டர்கள் சஸ்பெண்ட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in