தமிழ் தெரியாது... உறுதிமொழி பத்திரத்தை வாசிக்க முடியாமல் விழிபிதுங்கிய மற்றொரு நாம் தமிழர் வேட்பாளர்!

வேட்புமனு தாக்கல் செய்த திருவள்ளூர் தொகுதி நாதக வேட்பாளர்
வேட்புமனு தாக்கல் செய்த திருவள்ளூர் தொகுதி நாதக வேட்பாளர்

நாம் தமிழர் கட்சி சார்பில் விருதுநகரில் போட்டியிடும் மருத்துவர் கவுசிக் போல, திருவள்ளூரில் போட்டியிடும் ஜெகதீஸ் சுந்தர் வேட்புமனு தாக்கல் செய்தபோது உறுதிமொழி படிவத்தை படிக்க முடியாமல் திணறிப்போய் நின்ற சம்பவம் பரபரப்பை உருவாக்கியது.

கெளசிக் - சீமான்
கெளசிக் - சீமான்

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக மருத்துவரான கவுசிக் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தபோது, உறுதிமொழி பத்திரத்தை வாசிக்க முடியாமல் திணறினார். பிறகு ஆட்சியர் சொல்ல, அவர் பின்தொடர்ந்து சொன்னார். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கு தமிழ் தெரியவில்லை என்று சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

தமிழை வாசிக்க முடியாமல் தவித்த நாதக வேட்பாளர்
தமிழை வாசிக்க முடியாமல் தவித்த நாதக வேட்பாளர்

அதேபோன்று, வேட்புமனு தாக்கலின்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ் படிக்க தெரியாமல் திணறி நின்ற சம்பவம் இன்று நடந்துள்ளது. திருவள்ளூர் தொகுதியில் நாதக வேட்பாளராக ஜெகதீஸ் சுந்தர் போட்டியிடுகிறார். இவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, தமிழில் எழுதி இருந்த உறுதிமொழிப் பத்திரத்தை படிக்கத் தெரியாமல் ஜெகதீஸ் சுந்தர் செய்தவறியாது நின்றார். இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் வாசிக்க, அதனை திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

தமிழ் மண்ணுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள், தனக்கு தமிழ் தெரியாது என்று உறுதிமொழி படிவத்தை படிக்க முடியாமல் தேர்தல் அதிகாரிகளின் உதவியோடு வாசித்த சம்பவம், சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்தை பெற்று வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in