மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

அமைச்சருக்கே ஷாக் கொடுத்த குமரி பாஜக!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கும், குமரி பாஜகவினருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். அமைச்சர் மனோ தங்கராஜ், பத்மநாபபுரம் சட்டசபைத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த தொகுதியின் தலைநகராக மதிக்கப்படும் பத்மநாபபுரம் நகராட்சியின் தலைவர், துணைத் தலைவர் பதவிகள் இதுவரை திமுக வசமே இருந்தன. இதில் துணைத்தலைவராக இருந்த திமுகவின் தக்கலை மணி அண்மையில் உயிர் இழந்தார்.

இதையடுத்து நேற்று நடைபெற்ற துணை தலைவர் தேர்தலில் திமுகவிடம் இருந்த பதவியைை பாஜக கைப்பற்றிவிட்டது. இதைக் கொண்டாட்டமாகக் கொண்டாடி வரும் பாஜகவினர், “அமைச்சர் தொகுதியில், நகர்மன்றத்தையே அவரால் தனது கைக்குள் வைக்க முடியவில்லை. சொந்தத் தொகுதியிலேயே அவருக்கு அவ்வளவுதான் செல்வாக்கு” என வழக்கம்போல் சிண்டுமுடிகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in