மாநிலங்களவைத் தேர்தலில் குதிரை பேரம்? - எம்எல்ஏ-க்களை ஹோட்டலில் தங்கவைக்கும் சிவசேனா

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே

மாநிலங்களவைத் தேர்தல் முடியும் வரை அனைத்து எம்எல்ஏ-க்களையும் மும்பை ஹோட்டலில் தங்கவைக்க சிவசேனா கட்சி முடிவு செய்துள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுகின்றனர். இதில் மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் சிவசேனா 2 பேரையும், காங்கிரஸ் கட்சி ஒருவரையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒருவரையும் வேட்பாளராக அறிவித்தன.

பாஜக சார்பில் இருவர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் சார்பில் 3 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் கடும் போட்டி உருவாகியுள்ளது.

இந்தத் தேர்தலில் ஆறாவது இடத்திற்கான போட்டி சிவசேனாவின் வேட்பாளரான சஞ்சய் பவார் மற்றும் பாஜகவின் வேட்பாளரான தனஞ்சய் மகாதிக் இடையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக, எம்விஏ கூட்டணி தவிர இரண்டு எம்எல்ஏ-க்களைக் கொண்ட சமாஜ்வாதி கட்சி மற்றும் மூன்று எம்எல்ஏ-க்களைக் கொண்ட பகுஜன் விகாஸ் அகாதி கட்சி ஆகியவை இன்னும் தங்களின் ஆதரவு யாருக்கு எனத் தெரிவிக்கவில்லை.

இந்தச் சூழலில் குதிரை பேரத்தைத் தவிர்ப்பதற்காக மகா விகாஸ் அகாடி கூட்டணியின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அனைத்து எம்எல்ஏ-க்களையும் வரும் ஜூன் 8-ம் தேதி மும்பைக்கு வரும்படி சிவசேனா கேட்டுக்கொண்டுள்ளது. ஜூன் 10-ம் தேதி தேர்தல் முடியும் வரை அவர்களை தெற்கு மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. இதனால் மகாராஷ்டிர அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in