பள்ளிக்குழந்தைகளிடம் தேர்தல் பிரச்சாரம்... சிக்கலில் சிவசேனா எம்எல்ஏ!

சிவசேனா எம்எல்ஏ சந்தோஷ் பங்கர்
சிவசேனா எம்எல்ஏ சந்தோஷ் பங்கர்

வரும் மக்களவைத் தேர்தலில் உங்கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்கவில்லையென்றால், 2 நாட்களுக்கு நீங்கள் எதுவும் சாப்பிட வேண்டாம் என்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏ பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனா எம்எல்ஏ சந்தோஷ் பங்கர்
சிவசேனா எம்எல்ஏ சந்தோஷ் பங்கர்

மகாராஷ்டிரா மாநிலம், ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளிக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏ சந்தோஷ் பங்கர் சென்றிருந்தார். அங்கு அவர் பேசிய பேச்சுதான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பள்ளி மாணவர்களிடம் பங்கர் மராத்தியில், “ மக்களவைத் தேர்தலில் உங்கள் பெற்றோர் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், இரண்டு நாட்களுக்கு நீங்கள் எதுவும் சாப்பிட வேண்டாம்” என்று கூறுகிறார். அத்துடன், " ஏன் சாப்பிடவில்லை என்று கேட்டால்,சந்தோஷ் பங்கருக்கு வாக்களியுங்கள். அப்போது தான் சாப்பிடுவோம் என்று கூறவேண்டும்" என்று பள்ளிக் குழந்தைகள் முன்பு அவர் பேசியுள்ளார்.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, வாக்குகளைச் சேகரிக்க குழந்தைகளை அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குழந்தை தொழிலாளர் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1986-ன் சில விதிகளை மீறுகிறது. தற்போது சந்தோஷ் பங்கர் பேசியது தேர்தல் விதிகளுக்கு முரணானது என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

அத்துடன் குழந்தைகளை மிரட்டிய பங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் சரத்பவார் தலைமையிலான காங்கிரஸ் மற்றும் என்சிபி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சந்தோஷ் பங்கர் எம்எல்ஏ அதிரடி அரசியலுக்குப் பெயர் போனவர். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகவில்லை என்றால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கடந்த மாதம் பேசி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in