பொற்கோயில் அருகே சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை

பொற்கோயில் அருகே சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை

அமிர்தசஸ் பொற்கோயில் அருகே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுதிர் சூரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் புகழ்பெற்ற பொற்கோயில் உள்ளது. அந்தக் கோயில் வளாகத்திற்கு வெளியே குப்பையில் உடைந்த சாமி சிலைகள் சில கிடந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா சார்பில் தர்ணா போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சுதிர் சூரி தலைமையில் அக்கட்சியினர் அதிகாரிகளுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அவர்களைப் போலீஸார் தடுத்ததால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்த நிலையில் அப்போது கூட்டத்தில் இருந்தவர் ஒருவர் சுதிர் சூரியை துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சுதிர் சூரி உயிரிழந்தார்.

இச்சம்பவத்தைப் பார்த்த ஒருவர் கூறுகையில்,"காரில் இருந்து இரண்டு பேர் வெளியே வந்தனர். அதில் ஒருவர், மிக அருகில் இருந்து சுதிர் சூரி மீது 5 முறை சுட்டார். இதில் அவரது தலை, தோளில் குண்டு பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே சுதிர் சூரி உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் நடந்த போது அந்த பகுதியில் போலீஸார் நின்று கொண்டிருந்தனர்" என்றார்.

இச்சம்பவம் குறித்து சிவசேனா பஞ்சாப் தலைவர் யோகராஜ் ஷர்மா கூறுகையில்," ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்றதில் இருந்து பஞ்சாப்பில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது" என்று குற்றம் சாட்டினார். பஞ்சாப்பில் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் அடுத்து ஒரு கட்சி தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்து அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in