102 நாட்கள் சிறைவாசம்: வெளியே வந்தார் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்!

102 நாட்கள் சிறைவாசம்: வெளியே வந்தார் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் 102 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் இன்று வெளியே வந்தார்.

மும்பை குடியிருப்பு பகுதியை மாற்றி அமைப்பதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மீது புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரிக்க இருமுறை சஞ்சய் ராவத்துக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

இந்நிலையில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சஞ்சய் ராவத் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 9 மணி நேர சோதனைக்குப் பின் அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்தை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த கைது நடவடிக்கை கடந்த ஜூலை 31-ம் தேதி நடைபெற்றது.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் ராவத் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே, காரணமின்றி அப்பாவிகளை கைது செய்து துன்புறுத்துவதா என்று அமலாக்கத்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சஞ்சய் ராவத் உதவியாளர் பிரவீன் ராவத் மீதான வழக்கு சிவில் தன்மை கொண்டது. குற்ற வழக்கல்ல என்றும் சஞ்சய் ராவத் எந்தவித காரணமுமின்றி கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறி அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, 102 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு சஞ்சய் ராவத் சிறையில் இன்று இரவு வெளியே வந்தார். அவரை சிவசேனா தொண்டர்கள் மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in