பல எம்எல்ஏக்களை தொடர்புகொள்ள முடியவில்லை; 40 பேரை உடைக்க பாஜக வியூகம் - ஆம் ஆத்மி பகீர் புகார்

பல எம்எல்ஏக்களை தொடர்புகொள்ள முடியவில்லை; 40 பேரை உடைக்க பாஜக வியூகம் - ஆம் ஆத்மி பகீர் புகார்

டெல்லியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் இல்லத்தில் நடைபெறும் நிலையில், பல எம்எல்ஏக்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று நடைபெறும் கூட்டத்திற்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் பலரை தொடர்புகொள்ள முடியவில்லை என தகவல் வெளியான நிலையில்,

இது குறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவர் திலீப் பாண்டே, " அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தொடர்பு கொண்டு நேற்றைய தினம் கூட்டம் தொடர்பான செய்தி தெரிவிக்கப்பட்டது. எனவே அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் பங்கேற்பார்கள். ஆனால் 40 எம்.எல்.ஏ.க்களை உடைக்க பாஜக தயாராகி வருகிறது" என்று கூறினார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்தச் சூழலில்தான், தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ள எம்எல்ஏக்களால் ஆம் ஆத்மி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. ஏற்கனவே இந்த முறையில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க "ஆபரேஷன் தாமரை" திட்டத்தை தீட்டியதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், அர்விந்த் கேஜ்ரிவால் அரசைக் கவிழ்க்க பாஜக எம்எல்ஏக்களுக்கு ரூ.20 கோடி பேரம் பேசப்படுவதாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் நேற்று குற்றம் சாட்டினார். தன் மீதான வழக்குகளை கைவிடுவதாகவும், அணி மாறினால் தன்னை முதல்வராக்குவதாகவும் பாஜக பேரம் பேசியதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியிருந்தார்.

ஆம் ஆத்மி கட்சி மீதான பிடி இறுகிவரும் நிலையில் இன்று நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாத உறுப்பினர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in