பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

முதல்வர் பசவராஜ் பொம்மை
முதல்வர் பசவராஜ் பொம்மை

சமத்துவத்தை உறுதி செய்வதற்காக மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்துவது குறித்து தனது அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்

இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேசிய அளவில் பாஜகவின் முக்கிய அறிக்கையின் ஒரு பகுதியான பொது சிவில் சட்டத்தை கர்நாடகாவில் அமல்படுத்துவது குறித்து தனது அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. யுசிசியை செயல்படுத்த பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்ட குழுக்களையும் மாநில அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது” என தெரிவித்தார்

சிவமொகாவில் பாஜக தொண்டர்களிடம் பேசிய முதல்வர், “தீன்தயாள் உபாத்யாய் காலத்தில் இருந்து பொது சிவில் சட்டம் பற்றி பேசி வருகிறோம். நாடு மற்றும் மாநில அளவில் இது தொடர்பாக தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. சரியான நேரம் வரும்போது இதனை செயல்படுத்தும் எண்ணமும் உள்ளது. மக்கள் நலனை சாத்தியமாக்கும் மற்றும் சமத்துவத்தை கொண்டு வர அனைத்து வலுவான நடவடிக்கைகளையும் எடுப்போம்” என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in