ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தனி தீர்மானம்: காங்கிரஸ் நாளை கொண்டு வருகிறது

செல்வபெருந்தகை
செல்வபெருந்தகை

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு எதிராக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை தனி தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அக்கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்கவில்லை. அத்துடன் அறிக்கையில் இருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும், பெரியார், அண்ணா ,கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிடாமல் அந்த பத்தியை முற்றிலுமாக தவித்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட நிலையில் , ஆளுநர் கூட்டத்தொடர் முடிவதற்குள் பாதியிலேயே வெளியேறினார். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் புயலைக்கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், " தமிழ்நாடு ஆளுநர் ரவி, சட்டப்பேரவையில் நடந்து கொண்ட அநாகரிக செயலைக் கண்டித்து ஆளுநருக்கு எதிரான காங்கிரஸின் தனி நபர் தீர்மானத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளோம்.

ஒன்றிய அரசில் மோடி செய்வதைத் தமிழ்நாட்டில் அவரது வாரிசாக ரவி செய்து வருகிறார். தேசியகீதம் இசைக்கப்பட்டு பேரவை முடியும் முன்பே வெளியேறி பேரவை வரலாற்றில் இல்லாத மோசமான கலாச்சாரத்தை அவர் கொண்டு வந்துள்ளார்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in