செந்தில் பாலாஜி வழக்கு... ஏப்ரல் 30-ம் தேதி தீர்ப்பு!

செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய வழக்கில் ஏப்ரல் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், வழக்கு தொடர்பான வங்கி ஆவணங்களின் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க வேண்டியுள்ளதால், தன்னை விடுவிக்கக் கோரிய மனு மீது வாதிட அனுமதிக்கக் கோரி செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, விடுவிக்கக் கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் என, செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22-ம் தேதி நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறைக்கு உத்தரவிட்டார்.

அதன்படி செந்தில் பாலாஜி 22-ம் தேதி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு வங்கி தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டது. பின்னர், விடுவிக்கக் கோரிய மனு மீது ஏப்ரல் 25-ம் தேதி முதல் வாதங்களைத் தொடங்க செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில், “வங்கி ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை ஆவணங்களுக்கும் முரண்பாடு உள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”ஆவணங்கள் திருத்தப்படவில்லை. அனைத்து ஆவணங்களும் நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்டு பின்னர் வழக்கில் சேர்க்கப்பட்டது. விசாரணையில் ஆவணங்கள் சேகரிக்கப்பட்ட பின் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எந்த முரண்பாடுகளும் இல்லை” என தெரிவித்தார்.

இதையடுத்து செந்தில் பாலாஜி மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 30-ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in