வீல் சேரில் செந்தில் பாலாஜி... வைரலாகும் வீடியோவால் திமுகவினர் அதிர்ச்சி!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி, சிறைக்கு வீல் சேரில் அழைத்து சென்றதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. திடீரென உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய்களுக்காக சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சோதனை முடிந்தவுடன் சிறைக்கு செல்லும் போது செந்தில் பாலாஜிக்கு திடீரென கால் மரத்துப்போனதால் அவரால் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை அடைத்து அவர் வீல் சேரில் வைத்து அழைத்து செல்லப்பட்டார். செந்தில் பாலாஜி வீல் சேரில் அழைத்து வரப்பட்டதைக் கண்டு அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in