சாஸ்திரி பவனில் பரபரப்பு... செந்தில்பாலாஜிக்கு ஆம்புலன்ஸ் தயார்.. மத்திய பாதுகாப்பு படையினர் குவிந்தனர்!

காவலில் அழைத்துச் செல்லப்பட்ட செந்தில்பாலாஜி
காவலில் அழைத்துச் செல்லப்பட்ட செந்தில்பாலாஜி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிற அமைச்சர் செந்தில் பாலாஜியை, சிறப்பு அழைப்பாளர் என  அழைப்பிதழில் பெயர் போட்டு விழாவுக்கு அழைத்திருக்கிறது தமிழ்நாடு தடகள சங்கம். 

அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர் போட்டு அழைப்பிதழ்
அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர் போட்டு அழைப்பிதழ்

மத்திய அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு இதய  அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதன் பின்னர் புழல் சிறையில் இருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவரை நீதிமன்ற அனுமதி பெற்று நேற்று இரவே தங்கள் கஸ்டடியில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டிக்கு அமைச்சர்  செந்தில்பாலாஜியை சிறப்பு விருந்தினர் என போட்டு அழைப்பிதழ்  தயாரிக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

போட்டியை தொடங்கி வைக்கும் எம் எல் ஏ
போட்டியை தொடங்கி வைக்கும் எம் எல் ஏ

தளவாபாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டிக்கான அழைப்பிதழில் சிறப்பு விருந்தினர்களாக  அமைச்சர் செந்தில் பாலாஜியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனமும் கலந்து கொள்வதாக  பெயர் போடப்பட்டிருந்தது.   

இந்த மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் 16,18,20 வயதுடைய ஆண்கள், பெண்கள் என தனித்தனி பிரிவாக  தமிழ்நாடு முழுவதும் உள்ள 120-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ மற்றும் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், புகலூர் நகராட்சி தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஈட்டி எறிந்து போட்டியினை தொடங்கி வைத்தனர். 

ஆனால் இதற்காக தயாரிக்கப்பட்ட அழைப்பிதழில் அமைச்சர்  செந்தில்பாலாஜியின்  பெயரைப் போட்டுள்ளார்கள். 

சிறையில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளை முக்கிய பிரமுகர்களாக உருவகப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கவலை கொள்கின்றனர். 

முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் வால்டர் தேவாரம் இந்த தடகள சங்கத்தின் தலைவர். முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் டி கே ராஜேந்திரன் இந்த சங்கத்தின் துணைத் தலைவர். அப்படி முன்னாள் காவல்துறை அதிகாரிகள் உயர் பொறுப்பில் இருக்கிற தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் நடத்தப்படுகிற ஒரு விழாவில் சிறையில் இருக்கிற ஒருவர் வர முடியாது என்று தெரிந்தும் யாரை சந்தோஷப்படுத்த இப்படி செய்திருக்கிறார்கள் என தெரியவில்லை என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்த அமலாக்கத் துறையினர், சென்னை சாஸ்திரி பவனில் வைத்து விசாரித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 50 கேள்விகள் வீதம் 5 நாட்களும் விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், எந்நேரமும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம் என்பதால், தயார் நிலையில், சாஸ்திரிபவன் அருகிலேயே அதிநவீன ஆம்புலன்ஸ் நிற்கிறது. அப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in