இன்று இரவிற்குள் மயிலாடுதுறை, நாகப்பட்டினத்திற்கு மின்சாரம் வழங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

இன்று இரவிற்குள் மயிலாடுதுறை, நாகப்பட்டினத்திற்கு மின்சாரம் வழங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் இன்று இரவுக்குள் சீரான மின்சாரம் வழங்கக் கூடிய வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட துணை மின்நிலையத்தை மின்துறை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மெய்யநாதன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துள்ளோம். மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மின் விநியோகம் விரைவில் கிடைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களைச் சரிசெய்து உடனே மின்சாரம் வழங்க சொல்லி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 200 மின்கம்பங்களைக் கணக்கெடுத்துள்ளோம். பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதிகளில் மழைநீர் வடிந்த பிறகுதான் கணக்கெடுக்க முடியும். துணை மின்நிலையத்திலிருந்து டிரான்ஸ்பார்மருக்கு வரக்கூடிய வழிகளில் உள்ள அனைத்துக் கம்பங்களையும் சரிபார்க்க வேண்டியுள்ளது. அந்தப் பணிகள் முழுவதும் நிறைவடைந்த பிறகுதான் மின்சாரம் கொடுக்க முடியும். இன்று இரவுக்குள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் சீரான மின்சாரம் வழங்கக் கூடிய வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in