`வைகை ஆவியாகுது, தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்க'

செல்லூர் ராஜூக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டலுடன் பதிலடி
`வைகை ஆவியாகுது, தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்க'

மின்தடை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சொன்ன கிண்டல் கருத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டலுடன் பதிலடி கொடுத்துள்ளார்.

"மதுரையில் சித்திரை விழா நடைபெறுகிறது. அங்கு மின் தடை வராமல் இருக்க அணில்கள் வராமல் மின்சாரத் துறை அமைச்சர் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டலுடன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டலுடன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என தெரிந்து 'தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி. எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள்'' கிண்டல் செய்துள்ளார்.

Related Stories

No stories found.