செந்தில் பாலாஜி அவரின் தம்பி அசோக்
செந்தில் பாலாஜி அவரின் தம்பி அசோக்

செந்தில் பாலாஜி சகோதரரின் கரூர் பங்களா வீடு முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

கரூர் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஆண்டான் கோயில் கிழக்கு, மண்மங்கலம் தாலுகாவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் 2.49 ஏக்கரில் புதிதாக பங்களா வீடு ஓன்றை கட்டி வருகிறார். இந்த பங்களாவை முடக்கம் செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான நோட்டீஸை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கொடுத்துள்ளனர்.

அந்த நோட்டீஸில் லட்சுமி, நிர்மலாவிற்கு அந்த வீட்டை பரிசாக கொடுத்துள்ளார் என்றும், இந்த வீடு சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வீட்டை வேறொரு பெயரில் மாற்றவோ, விற்கவோ கூடாது என்று சார்பதிவாளருக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வீடு முடக்கியதற்கான நோட்டீசை நிர்மலாவுக்கு அனுப்பி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in