சிசிடிவியில் சிக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் கார் : டிரைவர் கைது பின்னணி இது தான்

கார் மோதும் காட்சி
கார் மோதும் காட்சிசிசிடிவியில் சிக்கிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் கார் : டிரைவர் கைது பின்னணி இது தான்

மத்தியப்பிரதேசத்தில் பைக் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சென்ற கார் மோதும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநில கோட்கியா மாவட்ட தலைவர் பிரகாஷ் புரோஹித்தின் தாயார் மறைவிற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் அஞ்சலி செலுத்த காரில் இன்று சென்றார். அங்கு மறைந்தவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு ராஜகர்க்கு காரில் திக்விஜய் சிங் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது ஜிராபூரில் திடீரென பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், காருக்கு நடுவே புகுந்து தெருவிற்குள் நுழைந்தார். இதனால் அந்த பைக் மீது திக்விஜய் சிங் வந்த கார் பயங்கரமாக மோதியது. இதனால் அந்த பைக்கில் இருந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு மின்கம்பத்தில் மோதி விழுந்தார்.

இதனால் காரில் இருந்த திக்விஜய் சிங் விரைந்து சென்று காயமடைந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதன் பின் அவர் வேறு ஒரு காரில் ஏறி ராஜகர்க்குச் சென்றார். இச்சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கார் மோதி காயமடைந்தவர் உத்தரப்பிரதேச மாநிலம் பராலியைச் சேர்ந்த ராம்பாபு(20) என்ற கூலித்தொழிலாளி என்று தெரிய வந்தது. சிறுகாயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின், போபாலில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில், வாலிபரின் பைக் மீது திக்விஜய் சிங் மோதும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், விபத்து குறித்து ஜிராப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து திக்விஜய் சிங்கின் கார் டிரைவரான குணாவைச் சேர்ந்த அக்தர் கானை கைது செய்தனர். அத்துடன் காரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in