வீட்டுக்கோ அல்லது சிறைக்கோ அனுப்புங்கள்: மகாராஷ்டிர ஆளுநர் மீது பாயும் உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை மற்றும் தானேயில் அமைதியாக வாழும் இந்துக்கள் மத்தியில் மகாராஷ்டிரா ஆளுநர் பிரிவினையை ஏற்படுத்தும் மகாராஷ்டிர ஆளுநரை வீட்டுக்கோ அல்லது சிறைக்கோ அனுப்புங்கள் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.

மும்பையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, “குஜராத்திகளும் ராஜஸ்தானியர்களும் இல்லாவிட்டால் மும்பை மற்றும் தானேவில் பணமே இருக்காது , நாட்டின் நிதித் தலைநகராகவும் மும்பை இருக்காது” என தெரிவித்திருந்தார். இதனால் கோபமடைந்த சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடின உழைப்பாளிகளான மராத்திய மக்களை ஆளுநர் கோஷ்யாரி அவமதித்து விட்டதாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மும்பை குறித்த தனது கருத்துக்கு மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தனது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்திய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே , “ உழைக்கும் மக்களான மராத்தி மக்கள் மீது ஆளுநருக்கு மனதில் இருந்த வெறுப்பு வெளியே வந்துவிட்டது. ஆளுநரின் கருத்து மகாராஷ்டிராவின் மண்ணின் மைந்தர்களுக்கும், மண்ணின் மாண்புக்கும் அவமதிப்பை உருவாக்கியுள்ளது. மராத்தி மக்களிடம் கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்தக் கருத்துகள் மூலம் மும்பை மற்றும் தானேயில் அமைதியாக வாழும் இந்துக்கள் மத்தியில் மகாராஷ்டிரா ஆளுநர் பிரிவினையை உருவாக்க முயல்கிறார். அவர் வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டுமா அல்லது சிறைக்கு அனுப்பப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது

ஏற்கெனவே சமூக சீர்திருத்தவாதியான சாவித்ரிபாய் பூலேவுக்கு எதிராகவும் அவர் தரக்குறைவான கருத்துகளை கூறினார். தற்போது மராத்திய மக்களையும் அவமதித்துள்ளார். ஆளுநரின் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே எவ்வளவு காலம் தான் அமைதி காக்க முடியும். அந்தப் பதவிக்கான நாற்காலியில் அமரும் நபர் அதற்கான மரியாதையைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா” என்று கூறினார்.

தனது கருத்துக்களுக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்புவதை கவனித்த ஆளுநர் கோஷ்யாரி, ”எனது கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. மராத்தி பேசும் மக்களின் கடின உழைப்பைக் குறைத்து மதிப்பிடும் எண்ணம் தனக்கு இல்லை" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in