எம்.பிக்களின் ஆதரவையும் இழக்கும் உத்தவ் தாக்கரே: நாடாளுமன்றத்தில் தனி அணியாக செயல்பட முயற்சி!

எம்.பிக்களின் ஆதரவையும் இழக்கும் உத்தவ் தாக்கரே: நாடாளுமன்றத்தில் தனி அணியாக செயல்பட முயற்சி!

12 சிவசேனா எம்.பி.க்கள் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் மக்களவையில் தனி அணியை அமைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவின் புதிய அமைச்சரவை குறித்து பாஜக தலைமையுடன் கலந்துரையாடுவதற்காக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே டெல்லிக்கு சென்ற நிலையில் தற்போது அவரின் பக்கம் எம்.பிக்கள் தாவத் தொடங்கியுள்ளனர்.

எம்.பி ராகுல் ஷெவாலே தலைமையில் தனி அணி செயல்படவுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நேற்றிரவு சிவசேனா கட்சியின் எம்.பிக்கள் கடிதம் எழுதினர். இந்த குழுவுக்கு எம்.பி பாவனா கவ்லி தலைமைக் கொறடாவாக நியமிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இவரை சமீபத்தில் உத்தவ் தாக்கரே அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக ராஜன் விச்சாரேவை நியமித்தார். ஆனால் சபாநாயகர் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.

மக்களவையில் சிவசேனாவுக்கு 19 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 12 பேர் திங்களன்று ஏக்நாத் ஷிண்டேவுடன் காணொலி மூலமான சந்திப்பில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 12 எம்.பி.க்களுக்கும் மத்திய அரசின் சிறப்பு ஒய்-பிரிவு பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

ஷிண்டே பிரிவு எம்.பி.க்கள் தனிக் குழுவாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்ற சபாநாயகர் முடிவு செய்த பிறகு, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே பிரிவினர் உரிமை கோரவுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in