‘அரசியல் அடிச்சுவடு தெரியாதவர்களை கட்சித் தலைவராக்கினால்....’ - அண்ணாமலை மீது சீறும் செல்வப்பெருந்தகை

‘அரசியல் அடிச்சுவடு தெரியாதவர்களை கட்சித் தலைவராக்கினால்....’ - அண்ணாமலை மீது சீறும் செல்வப்பெருந்தகை

நாகரீகம் தவழும் தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் அடிச்சுவடு தெரியாதவர்கள் கட்சியின் தலைவராக ஆக்கினால் இப்படித்தான் அநாகரிகமாக பேசுவார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள ட்வீட்டில், “பா.ஜ.க. தலைவர் திரு அண்ணாமலை அவர்கள், தமிழ்நாட்டில் இருக்கும் பத்திரிகையாளர்களை, செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களை ஒருமையில் அழைப்பது, குரங்கு என்று சொல்வதெல்லாம் அநாகரித்தின் உச்சம். இவர்களுக்கு நாவடக்கம் தேவை. பாஜகவினரின் இந்த போக்குக்கிற்கு வன்மையான கண்டனங்கள். தலைமையே இப்படி பேசினால், தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்?

சில வாரங்களுக்கு முன் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை தகாத வார்த்தைகளில் பேசி, அவர்களை அடிப்பதற்கு துணிந்தவர்கள் தான் இந்த பா.ஜ.க.வினர். நாகரீகம் தவழும் தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் அடிச்சுவடு தெரியாதவர்கள் கட்சியின் தலைவராக ஆக்கினால் இப்படித்தான் அநாகரிகமாக பேசுவார்கள். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் எதை எப்படி செய்யவேண்டுமென்று” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து கருத்து கேட்ட பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in