`இரை போட்டால் வரும் காக்கா கூட்டம் போன்றது பாஜக'- வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜு

`இரை போட்டால் வரும் காக்கா கூட்டம் போன்றது பாஜக'- வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜு
செல்லூர் ராஜூபடம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

``இரை போட்டு அழைத்தால் வரும் காக்கா கூட்டம் போன்றது பாஜகவின் கூட்டம். தமிழிசை போல மத்திய அரசின் பதவிக்காக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார்'' என்று செல்லூர் ராஜு கடுமையாக பாஜகவை விமர்சித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, "மதுரை மாநகராட்சி ஆணையர் மிக வேகமாக செயல்பட வேண்டும். மதுரையில் மேயருக்கு இணையாக சூப்பர் மேயரை திமுக நியமனம் செய்துள்ளது. மேயருக்கு இணையாக ஒருவரை நியமிக்க சட்டத்தில் இடம் இல்லை. நல்ல மேயர் தேர்வு செய்யப்பட்டால் மேயருக்கு ஆலோசகர் தேவையில்லை. ஆலோசனை சொல்ல மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் உள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் துன்பத்தை மட்டுமே அனுபவித்து வருகிறார்கள். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி சொன்னபடி வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். பெண்களுக்கு இலவச பேருந்துகள் முறையாக இயக்கப்படவில்லை. மத்திய அரசிடம் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை அண்ணாமலை கூறி வருகிறார்.

தமிழகத்தில் தற்போது, அதிமுக மட்டுமே எதிர்கட்சி, அதிமுக காக்கா கூட்டம் அல்ல, கொள்கை கூட்டம். பாஜகவிற்கு வருவது இரை போட்டால் வரும் காக்கா கூட்டம் போன்றது. பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைச்சாமியெல்லாம் அதிமுக குறித்து பேசுவது வேடிக்கையானது. எல். முருகன் வேலை பிடித்தார் அவருக்கு ஒரு பதவி, தமிழிசை வந்தார் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. பதவிக்காக கூட அண்ணாமலை அரசியல் செய்யலாம் அல்லவா? அதிமுக மீது துரும்பு கொண்டு எறிந்தால், நாங்கள் தூணை கொண்டு எறிவோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in