வெள்ளத்தடுப்பு பணிகள் அடுத்த பருவமழைக்குள் நிறைவு பெறும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

வெள்ளத்தடுப்பு பணிகள்  அடுத்த பருவமழைக்குள் நிறைவு பெறும்:  அமைச்சர் சேகர்பாபு தகவல்

தாழ்வான பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு அடுத்த பருவமழைக்குள் வெள்ளத் தடுப்புப் பணிகளை முடிக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்து அமைப்புகளிடம் இருக்கும் போது திருக்கோயில்கள் எவ்வளவு பராமரிக்கப்படுமோ, அதை விடக் கூடுதலாக அக்கறை கொண்டு திருக்கோயில்கள் பராமரிக்கப்படுவதில் இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.

மன்னர்களால் உருவாக்கப்பட்ட திருக்கோயில் என்றாலும், மன்னரால் நிர்வகிக்கப்பட்டு, மக்களாட்சி வந்த பிறகு அந்த திருக்கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் வந்துவிடும். குறைகள் எது இருந்தாலும், அதை மக்கள் சுட்டிக் காட்டலாம்.

கடந்த 31ம் தேதியிலிருந்து வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இந்த சிறிய இடைவெளியில் மாநகராட்சியைத் துரிதப்படுத்தி அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் பணிகளைச் செய்து வருகிறோம். இரண்டு நாட்களில் முடிய இருக்கும் கால்வாய் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியது. ஆனால் தற்போதுள்ள நிலையில் மழை விட்ட உடனே தண்ணீர் முழுவதும் வடிகின்ற சூழல் நிலவுகிறது. தாழ்வான பகுதிகளில் எங்கெல்லாம் மழைநீர் தேங்குகிறதோ அதையெல்லாம் கணக்கெடுத்து, அடுத்த பருவமழையின் போது அங்குத் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் பணிகளை முடிக்க வேண்டும் என முதல்வர் முனைப்போடு இருக்கிறார். இதற்காக 3 ஐஏஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in