`என்னிடம் வேலை கேட்டு வந்தவா் சேகர்பாபு'- கூட்டத்தில் அமைச்சர் நகைச்சுவை

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்-  அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்- அமைச்சர் சேகர்பாபு `என்னிடம் வேலை கேட்டு வந்தவா் சேகர்பாபு'- கூட்டத்தில் அமைச்சர் நகைச்சுவை

``என்னிடம் வேலை கேட்டு வந்தவா் சேகர் பாபு. தற்போது அவரைப் பார்க்க பொறாமையாக இருக்கிறது" என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நகைச்சுவையாக கூறினார்.

சென்னை மண்ணடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "அமைச்சர் சேகர்பாபு என்னிடம் வந்து ஏதாவது வேலை வாங்கி கொடுங்கள் என்று கேட்டார். உங்களுக்கு வேலை வாங்கி கொடுத்தால் உங்களுக்கு வேலை பார்க்க ஆள் இல்லாமல் போய்விடும்.

நான் அன்றைக்கு உங்களுக்கு வேலை கொடுக்காததால் இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினராக, மாவட்ட செயலாளராக, அமைச்சராக இருந்து இப்போது பணியாற்றுகிறார். அவரைப் பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கிறது. எனக்கும் சேகர்பாவுக்கும் உங்களைவிட அதிமுகவை பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் இரண்டு பேரும் அந்த கட்சியை பற்றி தெரிந்தவர்கள்" என்று நகைச்சுவையுடன் பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in