அதிகாலையில் நடந்த யாகம்: சேகர் ரெட்டியுடன் கலந்து கொண்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ!

அதிகாலையில் நடந்த யாகம்: சேகர் ரெட்டியுடன் கலந்து கொண்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமையவிருக்கும் கோயிலுக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார் சேகர் ரெட்டி. இதற்காக அதிகாலையில் யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகளோடு பணிகள் தொடங்கின.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்கடேச பெருமாளுக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் ஏற்கெனவே கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு உளுந்தூர்பேட்டையிலும் வெங்கடேச பெருமாளுக்குக் கோயில் வேண்டும் எனத் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரான குமரகுரு கோயில் கட்டுவதற்காக நான்கு ஏக்கர் நிலத்தைத் திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானம் எழுதி வைத்தார். இந்நிலையில் கடந்த வருடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாகியும் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் உளுந்தூர்பேட்டைக்கு வந்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசகர் சேகர் ரெட்டி கோயில் அமையவிருக்கும் இடத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டார். அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவும் கலந்து கொண்டார். யாகத்தைத் தொடர்ந்து கோமாதா பூஜையும் நடைபெற்றது. பின்பு சேகர் ரெட்டி தலைமையில் கட்டுமான பணிகள் தொடங்கின.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in